திருமணப் பொருத்தம் பார்க்கும் போது, பொதுவாக பத்து நட்சத்திரப் பொருத்தங்கள் பார்த்து சிலர் முடிவு எடுப்பார்கள்.
ஆனால் உண்மையில், ஜாதகத்தில் கிரகங்களின் அமைவு, அவற்றின் பலம் மற்றும் பலவீனங்களைப் பார்த்துத்தான் திருமணப் பொருத்தம் முடிவு செய்யப்பட வேண்டும்.
ஜோதிடத்தில் திருமண வாழ்க்கையை பாதிக்கும் வீடுகள் எவை தெரியுமா?
திருமணத்திற்கு பின் குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கு — லக்னத்திலிருந்து 2ம் இடம்
திருமண வாழ்க்கையை மனநிம்மதியுடன் கடப்பதற்கு — லக்னத்திலிருந்து 4ம் இடம்
தம்பதியர் பரஸ்பர புரிதலுக்காக — லக்னத்திலிருந்து 7ம் இடம்
திருமண பிரிவினையைத் தவிர்க்க — லக்னத்திலிருந்து 12ம் இடம்
அதாவது, 2, 4, 7, 12 ஆகிய வீடுகள் வலிமை பெற்றிருக்க வேண்டும்.
இந்த வீடுகளில் தீய கிரகங்கள் இருக்கக் கூடாது; மேலும், இந்த வீடுகளின் அதிபதிகள் தீய கிரகச் சேர்க்கை பெற்றிருக்கக் கூடாது.
இவற்றில் மிக முக்கியமான வீடுகள் 2ம் இடம் மற்றும் 7ம் இடம் ஆகும்.
குடும்பம் நன்றாக நிலைநிற்க 2ம் இடம் வலிமை பெற வேண்டும்.
கணவன்–மனைவி பரஸ்பர மகிழ்ச்சிக்காக 7ம் இடம் வலிமை பெற வேண்டும்.
2ம் மற்றும் 7ம் இடத்தின் அதிபதிகள் மறைவீடுகளில் இருக்கக் கூடாது.
அவை மறைவீடுகளின் அதிபதிகளோடு தொடர்பில் இருக்கக் கூடாது.
ஒரு எடுத்துக்காட்டு: என்டி ராமாராவின் ஜாதகம்
பலதார மணம் செய்த முன்னாள் ஆந்திர முதல்வரும், சினிமா நடிகருமான என்டி ராமாராவின் ஜாதகம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
இவர் துலாம் லக்னம் உடையவர்.
இவருடைய ஜாதகத்தில் 2, 4, 7, 12 ஆகிய வீடுகளின் பலம் மற்றும் பலவீனங்களைப் பார்ப்போம்.
துலாம் லக்னத்திற்கு 2ம் மற்றும் 7ம் இடத்தின் அதிபதி — செவ்வாய்
4ம் இடத்தின் அதிபதி — சனி
12ம் இடத்தின் அதிபதி — புதன்
அதனால், இவருடைய திருமண வாழ்க்கையை நிர்ணயிக்கும் கிரகங்கள் — செவ்வாய், சனி, புதன்.
லக்னத்திலிருந்து 8ம் இடத்தின் அதிபதியான சுக்கிரன் 7ம் இடத்தில் அமர்ந்துள்ளார், இது திருமண வாழ்க்கையில் பலவித பிரச்சனைகளை உருவாக்கும்.
7ம் இடத்தோன் செவ்வாய் மிதுனத்தில் அமர்ந்து ராகு வழியாக 11ம் இடத்துடன் தொடர்பு பெற்றிருப்பது பலதார திருமணத்தை உறுதிப்படுத்துகிறது.
4ம் இடத்தோன் சனி 12ம் இடத்தில் மறைந்து குடும்பத்தைப் பார்த்து குடும்பத்தையே கெடுத்துள்ளார்.
அதேபோல், செவ்வாய் பார்வையால் 7ம் இடமும் பாதிக்கப்பட்டுள்ளது.
12ம் இடத்தில் சனி அமர்ந்திருப்பதும் அதனை பலவீனப்படுத்துகிறது.
ஸ்ரீ கணபதி யோகம் — பாதுகாப்பான யோகம்
இவருக்கு பலதார திருமணம் நடந்திருந்தாலும், பிரிவுகள் அல்லது பெரிய பிரச்சனைகள் ஏற்படாமல் திருமண வாழ்க்கை தொடர்ந்தது ஸ்ரீ கணபதி யோகம் காரணமாகும்.
ஸ்ரீ கணபதி யோக அமைப்பு:
சுக்கிரன் — மேஷத்தில்
செவ்வாய் — மிதுனத்தில்
புதன் — ரிஷபத்தில்
இவ்வாறு இடம் மாறி அமைந்ததால் ஸ்ரீ கணபதி யோகம் உருவாகிறது.
இந்த யோகம் 7, 8, 9ம் வீடுகளில் நிகழ்ந்ததால், இது பலதார திருமண யோகமாக மாறியது.
ஆனால், எவ்வளவு பதவியும் வசதியும் இருந்தாலும், திருமண வாழ்க்கையின் தா்மங்களை மீறிய ஜாதகமாகவே இது விளங்குகிறது.