குரு இப்போது இருக்கும் மிதுனம் வீட்டிலிருந்து தற்காலிகமாக கடகத்திற்கு செல்லப் போகிறார்.
18.10.2025 அன்று கடகத்திற்கு செல்லும் குரு அங்கு 5.12.2025 வரை இருக்கப் போகிறார்.
சூரியனின் வட்டப்பாதையில் கிரகங்களின் சுழற்சியானது சீரான வேகத்தில்தான் இருக்கும்.
உள் சுற்றில் சுற்றிவரும் பூமியானது சுற்றுவட்டப்பாதை சிறியது.
வெகு தொலைவில் பெரிய வட்டப்பாதையில் சுற்றிவரும் கிரகங்கள் சுற்றுவட்டப்பாதை பெரியது.
சில நேரங்களில் பூமி முன்னே செல்வது போல் தோற்றம் தரும்.
சில நேரங்களில் பூமி பின்னே செல்வது போல் தோற்றம் தரும்.
முன்னே செல்வது போல் தோற்றம் தருவதை அதிசாரம் என்பார்கள்.
இப்போது குரு அதிசாரமாக கடகத்திற்கு சென்றுவிடுவதாக அமைந்து விடுகிறது.
சிறிது காலத்திற்கு போனஸாக சிலருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்,
சிலருக்கு தீய பலன்கள் கிடைக்கும்.
யாருக்கெல்லாம் நன்மைகள் என்று பார்க்கலாம்.
கடகத்தில் குருவின் பலன்கள் ராசி வாரியாக
மேஷம் ராசி – இதுவரையில் கடுமையான விரையச் செலவினை சமாளிக்க முடியாமல் தடுமாறியவர்கள் சற்று நிம்மதியாவார்கள்.
உடன்பிறப்பு வழியில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
இதுவரை தடைப்பட்ட பல முயற்சிகளை இந்தக் காலத்தில் துரிதமாக செய்து முடிப்பீர்கள்.
வீடு, வாகனம் வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
உத்யோகம், தொழில் – எதிர்பாராத உயர்வுகள், பணவருவாய்கள் கிடைக்கும்.
நீண்ட நாள் வேண்டுதல்களை நிறைவேற்ற கோவில் செல்வீர்கள்.
குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். புண்ணிய யாத்திரை செல்வீர்கள்.
ரிஷபம் ராசி – தடைப்பட்ட பணவருவாய் வேகம் பெறும்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிக்கு வழி பிறக்கும்.
குடும்ப நெருக்கடிகள் மாறும்.
ஆனால் முடிவெடுப்பதில் குழப்பங்கள் தோன்றும்.
புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது நிதானமாக யோசித்து, மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு ஈடுபடவும்.
எதிர்பாராத தனலாபம், சொத்துக்கள் வாங்குதல், பூர்வீக வழியில் நன்மைகள் என பல நல்ல விஷயங்களை சந்திப்பீர்கள்.
உடல் நலத்தில் கவனம் வைக்கவும்.
முன் ஜென்மக் கர்மம் ஒன்று பரிகார கோவிலுக்கு செல்வதன் வழியாக கொஞ்சம் குறையும்.
மிதுனம் ராசி – மிகப் பெரிய நிம்மதி கிடைத்திருக்கிறது.
மன உளைச்சல், தலைவலையாக இருந்த பிரச்சினைகள் அகலப்போகிறது.
குடும்பத்தில் நெருக்கடிகள் தோன்றும்.
செலவுகள் கட்டுக்கடங்காது போகும்.
கடன் வாங்க நேரிடும்.
கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் கெட்ட பெயர் வாங்க நேரிடும்.
எல்லாம் பின்னடைவான பலன்களாக இருந்தபோதிலும் மனநிம்மதி இருக்கும்.
எதனையும் சமாளிக்கும் திறன் இருக்கும்.
இதுவரை இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
உடல் நலத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
உத்யோகத்தில் தெளிவான சூழ்நிலை உருவாகும். பதவி உயர்வு, பண உயர்வு கிடைக்கும்.
கடகம் ராசி – குரு அவசியமற்ற செலவுகளை கொடுத்துவந்த நிலை இனி மாறப்போகிறது.
சேமிப்பு உயரும்.
பிள்ளைகள் முன்னேற்றம் காண்பார்கள்.
கணவன்–மனைவி மகிழ்ச்சியான காலத்தில் இருக்கப் போகிறீர்கள்.
திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் நடக்கப்போகிறது.
நீண்ட பயணங்கள், வெளிநாட்டு பயணங்கள் பலன் தரப்போகிறது.
திடீர் அதிர்ஷ்டம், பணவருவாய், உத்யோக முயற்சிகளில் வெற்றி, பதவி உயர்வு, பண உயர்வு என சகல நன்மைகளும் கிடைக்கப்போகிறது.
குருவினால் பிரகாசிக்கப் போகிறீர்கள்.
சிம்மம் ராசி – இதுவரையில் குரு நன்மைகள் செய்த நிலை மாறி, தேவையற்ற செலவுகளிலும் மனம் செல்லும்.
ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.
அவசரத் தேவைகளுக்காக கடன் வாங்குவீர்கள்.
பணம் இருந்தாலும் செலவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
ஆனாலும் நீண்ட பயணங்கள், வெளிநாட்டு பயணங்கள், ஆன்மீக சுற்றுலா என கவனம் திரும்பும்.
எந்த விதமான பிரச்சினைகளையும் சமாளித்து விடுவீர்கள்.
மன நிம்மதி கிடைக்கப் போகிறது – அதுதானே மிகப்பெரிய செல்வம்.
கன்னி ராசி – குரு உத்யோகம், தொழிலில் கடுமையான மன உளைச்சலை கொடுத்துவந்த நிலை மாறப்போகிறது.
எப்படித்தான் பணம் வருகிறது என குழம்பிப்போவீர்கள்; அந்த அளவிற்கு பணம் வந்து குவியப்போகிறது.
பிள்ளைகள் வழியில் உன்னதமான நிலையை சந்திப்பீர்கள்.
உடன்பிறந்தவர்கள் வழியில் அனுகூல செய்தி கிடைக்கும்.
திடீர் அதிர்ஷ்டங்கள், யூக வணிகத்தில் ஆதாயம் என பணம் பல வழிகளில் கிடைக்கும்.
திருமணம், உத்யோகம் வாய்ப்புகள் கிடைக்கும்.
குடும்பத்தில் மனநிம்மதி, கணவன்–மனைவி அன்யோன்யம் கிடைக்கும்.
துலாம் ராசி – பூர்வீக வழியில் பிரச்சினைகளை கொடுத்துவந்த நிலை மாறப்போகிறது.
தடைப்பட்ட பல பணிகள் முடிவுக்கு வரும்.
திட்டமிட்ட வேலைகளை இனி செய்ய தடைகள் இருக்காது.
உத்யோகம், தொழிலில் மிகப்பெரிய மாற்றங்களை சந்திப்பீர்கள்.
ஆனால் கவனமாக தொழில் மாற்றங்களை செய்ய வேண்டும்.
‘விரிவாக்கம்’ என்ற பெயரில் அதிக முதலீடு அதிக ஆபத்து என்பதை உணர வேண்டும்.
உத்யோகம்–தொழில் தொடர்பான முடிவுகளை தள்ளிப் போடுங்கள்.
ஆரம்பத்தில் ஆதாயம் தருவது போல இருக்கும்; பின்னர் நட்டம் கொடுக்கும்.
கேட்ட இடத்திலிருந்து கேட்ட கடன் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருள் சேர்க்கை, திருமணம், சுபநிகழ்வு என மகிழ்ச்சியான காலமாகும்.
விருச்சிகம் ராசி – குரு பணம் வரும் வழியினை காட்டப் போகிறார்.
குடும்பத்தில் சுகநிகழ்ச்சி, பொருள் சேர்க்கை, பணவரவு என நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள்.
திடீர் அதிர்ஷ்டம், யூக வணிகத்தில் லாபம், பிள்ளைகளால் அனுகூலம் கிடைக்கும்.
பூர்வீகச் சொத்தை நல்ல விலைக்கு விற்க முயல்வீர்கள்.
ஆனால் கவனமாக இருக்க வேண்டும்; ஏமாற வாய்ப்புண்டு.
உடன்பிறந்தவர்கள் உதவி செய்வார்கள்.
மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். சிலர் சில சாதனைகள் செய்து பெயர் பெறுவார்கள்.
தனுசு ராசி – குடும்பத்தில் இனி நிம்மதி கிடைக்கப் போகிறது.
ஆனால் உடல் நிலையில் சில சங்கடங்கள் உருவாகும்.
“ஒரு பிரச்சினை போனால் இன்னொரு பிரச்சினை வேறு ரூபத்தில் வருகிறதே” என நினைப்பீர்கள்.
எது எப்படியோ குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்.
திருமணம், பிள்ளைகளின் வேலை வாய்ப்பு, படிப்பு என சகலமும் நன்மை தரும் காலமாகும்.
நீண்ட பயணங்கள், ஆலய தரிசனங்கள், புண்ணிய நதி நீராடல், வெளிநாட்டு பயணம் கிடைக்கப் போகிறது.
வாகனம், வீடு வழியில் நன்மைகள் கிடைக்கும்.
மகரம் ராசி – இதுவரை உத்யோகம், தொழிலில் கொடுத்துவந்த நெருக்கடிகள் மாறப்போகிறது.
குடும்பத்தில் மன நிம்மதி கிடைக்கும்.
சுகநிகழ்ச்சி, பிள்ளைகள் திருமணம், வேலை வாய்ப்பு என நல்ல விஷயங்களை சந்திக்கப் போகிறீர்கள்.
ஆனாலும் கணவன்–மனைவி ஒத்துப் போவதில் சிரமத்தை உணர்வீர்கள்.
சரியாகச் சொல்லப் போனால் – விட்டுக் கொடுங்கள், அதில்தான் நன்மை அதிகம்.
இல்லற துணை வழியாக மிகப்பெரிய ஆதாயம் ஒன்று கிடைக்கப் போகிறது.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்; திருமணமானவர்களுக்கு குழந்தை பிறப்பு ஏற்படும்;
திருமண வாழ்க்கையில் திருப்பம் உணர்வீர்கள்.
கும்பம் ராசி – கொஞ்சம் “ரிலாக்ஸ்” பண்ணும் காலமாக இதனை எடுத்துக் கொள்ளுங்கள்.
இதுவரை பணவரவு திருப்தியாகத்தான் இருந்தது. இனி கொஞ்சம் நெருக்கடி கொடுக்கும்.
ஆனாலும் கடன் வாங்கி அதை சமாளித்து விடுவீர்கள்.
உங்களுக்கு கைகொடுக்கும் உத்யோகம், தொழில் என பணமீட்டும் துறைகளில் ஆதாயங்கள் அதிகமாக இருக்கும்.
பதவி உயர்வு, பண உயர்வு, விற்பனை உயர், உற்பத்தி உயர்வு என சகலும் ஆதாயம்தான்.
தொழில் விரிவாக்கம் நன்மை தரும்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சி உண்டு.
திருமணம், வேலை வாய்ப்பு, வெளிநாட்டு பயணம் என குடும்ப உறுப்பினர்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.
ஆலய தரிசனம், புண்ணிய நதி நீராடல், நீண்ட பயணங்கள் மகிழ்ச்சி தரும்.
மீனம் ராசி – இனி மனநிம்மதி கிடைக்கப் போகிறது.
கண்டதை மனதில் போட்டு குழம்பிய நிலை மாறப்போகிறது.
வீடு, வாகனம் வழியில் தடைகள் அகலப்போகிறது.
பணவருவாய் பல மடங்கு உயரும்.
எவ்வளவு பணம் வந்தாலும் உத்யோகம், தொழில், உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு கடுமையான பணிச்சுமை உருவாகும்.
தொழில் விரிவாக்கத்திற்கு அதிக பணத்தை செலவு செய்ய நேரிடும்.
மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் நடந்து கொள்வீர்கள்.
திடீர் அதிர்ஷ்டம், பிள்ளைகள் வழியில் ஆதாயம், தடைப்பட்ட பணவரவு, எதிர்பார்த்த இடங்களில் அனுகூலம் கிடைக்கும்.